கோதார்டின் குறிப்பேடு

கோதார்ட் தன் தற்போதைய ஆய்வுப் பணியின் களசேகரங்கள், கவனநிலைகள், கவனமின்மைகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்த தன் குறிப்பேட்டைத் தினமும் போலவே இன்றும் திறந்து வைத்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கையில், அவருள்ளம் முதலை வயிற்றில் இறங்கும் மரித்த மானுடலென மெல்ல நழுவிக்கொண்டிருந்தது. மனநிலையிலிருந்து நழுவுதலே பல புதிய கருத்துகளையும், கருவிகளையும் உலகிற்குக் கொடையெனத் தந்துள்ளது; மாறாக மனநிலைகொள்ளல் அல்ல. மனநிலைகொள்ளல், மனக்குவியம், மனவொருமுகம் ஆகியவை … Continue reading கோதார்டின் குறிப்பேடு

கனவு குதித்தல்.

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்குக்காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக் கொள்ளும் ஆயிரமாயிரம் நுண் துகள்களைக் கூட அந்த குடுவையின் நினைவின் முக்கியத்துவமற்ற பகுதி என்று முடிவுசெய்தல் மேலோட்டமானது. மறுபுறம் கனவுகள்; கனவுகள் எத்தனை வலிமையானது, எத்தனை பீதியூட்டக் கூடியது. இன்கனவுகளே … Continue reading கனவு குதித்தல்.

தீக்காயும் பனித்துளிகள்.

‘கிளைதோறும் மரந்தோறும் இலைதோறும் வாழ்வு’ நிறைந்தோடுவது போல, ஒரு திரைப்படத்தில், ஒவ்வொரு சட்டகத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு இசைப் பெருக்கிலும் ஆன்மா நிறைந்து வழிந்தால் அதை உன்னதமான படம் என்று அடையாளங்கொண்டு ஆக வேண்டும். திரைப்படங்களில் கதைகளைச் சொல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் தேவைப்படுகிறது. காதலில் வழியும் நீலத்தின் குழைவையும் வல்லமையையும் கனப்பையும் தவிப்பையும் சொல்வதற்கு ஓவியத்தின் நிற அடுக்கங்களும் உளங்களின் சலனத்தைச் … Continue reading தீக்காயும் பனித்துளிகள்.